கொரோனா மரணம் குறித்து பொய் சொல்லவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் மரணிப்போர் தொடர்பான புள்ளி விபரங்களை மறைத்து வருவதாக எழுந்துள்ள குற்றச் சாட்டுகளைச் சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.
பல தரப்பினரிடமிருந்து தகவல்களைப் பெற்ற பின்னர் மரணத்திற்கான காரணம் தீர்மானிக்கப்படும் என்று இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.