உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சாட்சிகளை அழிக்க முயற்சி: பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த எதிர்கட்சி!

கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி பாரிய குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இந்த நாட்டில் இதுவரை யார் மீதும் வழக்கு தொடரப்படவில்லை என்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவில் தற்போது மூவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது இலங்கையில் கைதுசெய்யப்பட்டு உள்ளவர்கள் என்றும், இந்த நிலைமை குறித்து தாம் வெட்கமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாட்சிகளை அழிப்பதற்காவே இவ்வாறு தாமதம் செய்யப்படுகின்றதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.