இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் மேலும் 267 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 490 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,489ஆக அதிகரித்திருக்கின்றது என்றும் அவர் கூறினார்.