இலங்கைக்கு இப்படி ஒரு நிலை! 150 பில்லியன் ரூபாவினால் வீழ்ச்சி

இலங்கைக்கு இப்படி ஒரு நிலை! 150 பில்லியன் ரூபாவினால் வீழ்ச்சி

இந்த ஆண்டு அரச வருமானம் 150 பில்லியன் ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக 'மூடி' முதலீட்டு சேவை நிறுவனத்தின் இணைநிறுவனமான 'இக்ரா லங்கா' நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆண்டுக்குள் அரசிற்கு 450 பில்லியன் ரூபா வரையில் வருமானம் பற்றாக்குறை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இக்ரா லங்கா நிறுவனம் 2020 ஆம் ஆண்டின் பொருளாதார தரவு மற்றும் 2021 ஆம் ஆண்டின் கணிப்புகள் என்பவற்றை நேற்று வெளியிட்டிருந்தது.

இதற்கமைய ஆண்டின் பொருளாதாரம் 4 சதவீத மறை வளர்ச்சி வீதத்தை காட்டமென எதிர்பார்க்கப்படுகின்றது.