கொரோனா பரவும் கவலை கொஞ்சம் கூட இல்லாமல் விடிய விடிய பார்ட்டி கொண்டாடிய ஒரு கூட்டம்! எங்கு தெரியுமா?

சுவிஸ் தலைநகரில் கொரோனா பரவல் குறித்த கவலை கொஞ்சம் கூட இல்லாமல் விடிய விடிய பார்ட்டி கொண்டாடினர் ஒரு கூட்டம் மக்கள்.

இரவு விடுதி ஒன்றில் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு தொடங்கிய அந்த பார்ட்டி, நேற்று காலை 8 மணி வரை நீடித்துள்ளது.

21 மணி நேரம் தொடர்ந்த அந்த பார்ட்டியால் ஏற்பட்ட சத்தம் தங்களுக்கு தொந்தரவாக இருப்பதாக அயலகத்தார் பலர் பொலிசில் புகாரளித்தனர்.

அதே நேரத்தில் பார்ட்டியில் பங்கேற்ற பலரும், சிலர் மட்டுமே மாஸ்க் அணிந்திருந்ததாகவும், கொஞ்சமும் கொரோனா குறித்த கவலையின்றி காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 8 மணிக்குத்தான் பொலிசார் வந்து பார்ட்டியை நிறுத்தினர்.

ஏற்கனவே சூரிச்சில் பார்ட்டி ஒன்றில் கொரோனா தொற்றுடைய ஒருவர் பங்கேற்றதைத் தொடர்ந்து, அந்த பார்ட்டியில் பங்கு கொண்ட 300 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.