அசத்தும் வாட்ஸ்ஆப்.!

உலகு முழுமைக்கும் அதிகப்படியான பயனாளர்களைக் கொண்டிருக்கக்கூடிய முன்னணி சமூக வலைத்தளங்களுள் ஒன்றான வாட்ஸ்ஆப் ஆனது குறுகிய காலத்தில் அதிகப்படியான பயனாளர்களையும் அவர்கள் வாயிலாக அதிகப்படியான வளர்ச்சியையும் அடைந்திட்ட நிறுவனமாகும். இதற்கான காரணம் தனது வலைத்தளத்தின் வழியாக பயனாளர்களுக்கு வழங்கிய பல்வேறு அம்சங்களே ஆகும்.புதிய அம்சம் :

புகைப்படம்,வீடியோ உள்ளிட்டவற்றை எளிதாக பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் விரைவாக தகவல்களைப் பரிமாறிக்கொள்ளுதல் உள்ளிட்ட வசதிகளினை இது தனது பயனாளர்களுக்காக வழங்குகிறது.மேலும்,இப்போது பல புதிய அம்சங்களையும் தனது பயனாளர்களுக்கு வழங்கத் துவங்கியிருக்கிறது.விரைவில் புதிய அம்சம் :

அத்தகைய புதிய அம்சங்கள் வரிசையில் தற்போது தனது பயனாளர்களுக்காக புதிய அம்சத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த புதிய அம்சம் என்னவெனில், இனி வாட்ஸ்ஆப் வழியே குரூப் வீடியோ கால், குரூப் வாய்ஸ் கால் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவியலும். தற்போது சோதனை பதிப்பில் உள்ள இந்த வசதியை விரைவில் அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளர்களும் பெறலாம்.