சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசுப் பேருந்துகள்

சீன நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட 9 சொகுசுப் பேருந்துகளை ஏற்றி வந்த கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 68 குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகள் பெறும் திட்டத்தில் முதல் கட்டமாக குறித்த 9 பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் கப்பலில் வந்தடைந்த பேருந்துகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டுள்ளன