மஹோவிலிருந்து ஓமந்தை வரையான புகையிரத பாதை - புதிய ஒப்பந்தம்

மஹோவிலிருந்து ஓமந்தை வரையான புகையிரத பாதையை மேம்படுத்தும் புதிய ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவின் IRCON நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்குமிடையில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 91.26 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மஹோ முதல் ஓமந்தை வரையிலான 130 கிலோமீற்றர் நீளமாக புகையிரதப்பாதை இந்தியாவின் இந்த சலுகை நிதியில் மேம்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது .

அத்துடன் 7 புகையிரத தரிப்பிடங்கள், 12 உப தரிப்பிடங்கள், 78 புகையிரத கடவைகள் இந்த திட்டத்தில் புனரமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யும் புகையிரதங்கள், இரண்டு மடங்கு வேகத்தில் பயணிக்குமென தெரிவிக்கப்படுகிறது.

ஒப்பந்த ஒப்பந்தத்தில் IRCON இன்டர்நஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. சுனில் குமார் சவுத்ரி மற்றும் இலங்கையின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் திரு. எல்.பி.ஜெயம்பதி ஆகியோர் போக்குவரத்து மற்றும் சிவில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

இதேவேளை சுமார் 100 வருடங்களின் பின்னர் இந்த பாதை புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.