கொழும்பிற்கு வந்துள்ள சீனாவின் அதி நவீன புகையிரத பெட்டிகள்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதி நவீன எஸ் - 14 புகையிரத பெட்டிகள் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மத்திய மாகாணத்திற்கான புகையிரத சேவைக்காக கொண்டு வரப்பட்டுள்ள இந்த புகையிரத பெட்டிகளின் பெறுமதி 10.3 அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அதி நவீன எஸ் - 14 இயந்திரங்கள் இரண்டும் காணப்படுகின்றதோடு இரண்டாம் வகுப்பிற்காக குளிரூட்டப்பட்ட இரு புகையிரத பெட்டிகளும், மூன்றாம் வகுப்பிற்காக மூன்று புகையிரத பெட்டிகளும் அதில் காணப்படுகின்றதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் உணவு அறையொன்றும் இந்த புகையிரதத்தில் உள்ளடங்குகின்றது.

எதிர்வரும் நாட்களில் அவற்றினை பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் எட்டு புகையிரதங்கள் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், அவற்றில் குளிரூட்டப்பட்ட புகையிரத பெட்டிகள் நான்கு உள்ளிட்ட 7 பெட்டிகள் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவை இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் நகரங்களுக்கிடையிலான புகையிரத சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.