உலகை திரும்பிப் பார்க்க வைத்த சார்லி!! பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு..

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனைச் சேர்ந்த தம்பதி கிறிஸ் கார்ட்- கொன்னி யேட்ஸ். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சார்லி என பெயரிட்டனர்.

பிறக்கும் போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்த சார்லிக்கு மூளை சேதம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக அவரது பெற்றோர் சமூகவலைத்தளங்களில் உதவிகளை நாடினர்.

இதனால் சார்லி உலகில் உள்ள அனைத்து மக்களாலும் அறியப்பட்டார். இருந்த போதிலும் 11 மாத குழந்தையான சார்லிக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய காலம் கடந்துவிட்டதால், அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனில்லை என்பதால், சமீபத்தில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சார்லிக்கு சிகிச்சை நிறுத்தப்பட்டதால் சார்லி இறந்துவிட்டான்.

சார்லியின் இறப்பை தாங்க முடியாமல் பெற்றோர் மிகுந்த சோகத்தில் இருந்தனர். இந்நிலையில் அவர்கள் தற்போது ஒரு அமைப்பு ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.

சார்லியின் பெயரில் உருவாக்கப்படவுள்ள இந்த அமைப்பு மூலம் வரும் பணங்களை, பணமின்றி சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு உதவப் போவதாகவும், உலகில் கணக்கிலடங்காத குழந்தைகள் வாழ்வதற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த முயற்சியை சார்லியின் பெற்றோர் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், தங்கள் குழந்தை சார்லிக்கு சிகிச்சை அளிப்பதற்கு உலகில் பல பகுதிகளிலிருந்து நிதி கிடைத்தது. தங்கள் குழந்தை சார்லி போன்று உலகில் பல குழந்தைகள் நோயை எதிர்த்து போராடி வருகின்றனர்.

நோயை குணப்படுத்த முடியும் என்ற போதிலும், அதற்கான போதிய பணம் இல்லாமல் தவிக்கின்றனர். அது போன்றவர்களுக்கு உதவுவதற்கே இது போன்ற முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.