வீட்டு பாத்ரூமில் பயங்கரம்

வீட்டு பாத்ரூமின் ரொயிலட் மூடியைத் திறக்க முயன்ற 5வயதுச் சிறுவன் ஒருவன் , உள்ளே பாம்பொன்று சுருண்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளான். இங்கிலாந்தின் எஸ்செக்ஸ் பிராந்தியத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இந்தப் பாம்பை அகற்றியபோது அது 3அடி அதாவது 91சென்ரி மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்புக் குட்டி என்று அதிகாரிகள் அறியவந்துள்ளர்கள் .

நீண்ட நாட்களாகவே ரொயிலட்டின் தண்ணீர் ஓட்டம் தடைப்பட்டு இருந்ததாகவும் , அதற்கான காரணம் தனக்கு தெரியவில்லை என்றும் சிறுவனின் தாயார் தெரிவித்திருந்தார் . எப்படியோ மேலே வந்து அங்கே சுருண்டு கிடந்தபோதுதான் சிறுவன் கண்டுள்ளான்.

இந்த பாம்பை வெளியில் எடுக்க உதவிய குழுவினர் , தமது பத்து வருட அனுபவத்தில் , வீடுகளுக்குள் புகுந்து பல பாம்புகளை பிடித்து வெளியேற்றி இருப்பதாகவும் , ரொயிலட் ஒன்றினுள் பாம்பைப் பிடித்தது இதுவே முதல் தடவை என்றும் கூறி உள்ளார்கள் .

மேற்கு ஆப்ரிக்காவுக்கு சொந்தமான இந்த இன மலைப்பாம்பு , சுமாராக 5அடி வரை வளரக் கூடியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.