எலிசபத் மகாராணியின் போர்க் கப்பல் விஜயம்

எச் எம் எஸ் சத்தர்லாண்ட் போர்க் கப்பலின் 20 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி எலிசபத் மகாராணி கப்பலுக்கான விஜயத்தை இன்று மேற்கொண்டார்.

லண்டன் கிழக்கிந்திய இறங்கு துறையில் தரித்து நின்ற எச் எம் எஸ் சத்தர்லாண்ட் போர்க் கப்பல் அதன் இருபது ஆண்டு சேவையை நிறைவு செய்துள்ளது. இது குறித்து கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபச்சாரத்தில் மகாராணியார் பங்கேற்றார்.

மகாராணியாரை கடறபடைத் தளபதி அன்ட்ரூ கனல், கப்பலின் மேற் தளத்தில் வாழ்த்தி வரவேற்றார். முன்னாள் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் இன்றைய விருந்துபச்சாரத்தில் பங்கேற்றிருந்தனர்.

பிரிதானிய எல்லைக் காவலில் தயார் நிலையில் இருக்கும் எச் எம் எஸ் சத்தர்லாண்ட் வழமையாக பிளைமவுத்தில் தரித்திருக்கும். ஐக்கிய இராச்சிய எல்லைக்குள் நுழையும் ரஷ்ய மற்றும் சீனப் போர்க் கப்பல்களுக்கான காவல் பணிகளில் இது ஈடுபடுவதுண்டு.

அடுத்த ஆண்டு முதல் இந்தப் போர்க் கப்பல் புதிய HMS Queen Elizabeth கப்பலுக்கான பாதுகாப்புப் பணிகளை வழங்கவிருக்கிறது.