இளைஞர்களுக்கு பிரித்தானிய இளவரசி எச்சரிக்கை!

இளைஞர்களுக்கு பிரித்தானிய இளவரசி எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களுக்கு இளைஞர்கள் அடிமையாகின்றனர். அதிலிருந்து மீளுவது கடினமாகும் என பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் எச்சரித்துள்ளார்.

மேற்கு லண்டனிலுள்ள பாடசாலையொன்றிற்கு நேற்று விஜயம் செய்திருந்த இளவரசி, மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ”சமூக வலைத்தளங்கள் தற்போது இளைஞர், யுவதிகளின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகியுள்ளது. அதில் நேர்மறை மற்றும் எதிர்மறை என இரு தாக்கங்களும் காணப்படுகின்ற நிலையில், அதிலிருந்து மீள்வது மிகவும் கடினமாகும்.

ஆனால் கற்றல் நடவடிக்கைகளுக்காக சமூக வலைத்தளங்களை நல்ல வழிகளில் பயன்படுத்தவும் கூடும்” என்றார்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்கள் மற்றும் பெற்றோரின் உளநலனை மேம்படுத்தும் வகையில் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன், பல்வேறு ஆலோசனைகளையும் நிபுணத்துவ பயிற்சிகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.