பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக இரண்டாவது வாக்கெடுப்பு நடத்தப்படாது

பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக இரண்டாவது வாக்கெடுப்பு நடத்தப்படாது

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக இரண்டாவது வாக்கெடுப்பு நடத்துவதற்கு பிரதமர் தெரேசா மே அனுமதிக்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரெக்சிற் தொடர்பாக புதிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கோரப்பட்டு வருகின்ற நிலையில், பிரதமரின் பேச்சாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிரெக்சிற்றிற்கு எதிரானவர்களை அமைதிபடுத்தும் வகையில் இரண்டாவது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் முன்னணி பிரெக்சிற் பிரசாரகரான நைகல் ஃபராஜ் கோரியிருந்தார்.

இரண்டாவது வாக்கெடுப்பு நடத்தினால் பிரெக்சிற் தொடர்பாக நிலவிவரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரெக்சிற் தொடர்பாக இரண்டாவது வாக்கெடுப்பு நடத்துவதற்கு சாத்தியமே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.