பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழரின் வீரச்செயல்- கொள்ளையர்களிற்கு 19 ஆண்டுகள் சிறைவாசம்!

பிரித்தானியாவில் இலங்கை பூர்வீகம் கொண்ட தமிழரின் ஒருவரின் துணிச்சல் காரணமாக 3 கொள்ளையர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 19 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு இரவு 10.15 மணியளவில், தனது கடையில் இடம்பெற்ற பாரிய கொள்ளை சம்பவத்தை கோபிநாத் மகாலிங்கம் என்ற இலங்கையர் போராடி முறியடிக்க முயற்சித்தபோது அச்சம்பவம் அங்கிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் நடத்தி வரும் கடைக்குள் திடீரென ஆயுதங்களுடன் 3 கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடிக்க ஆரம்பித்தனர்.

அப்போது இருவர் மகாலிங்கத்தின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்த மற்றைய நபர் கொள்ளையடிக்க முயன்றபோது அவர்களின் ஆயுதங்களுக்கு அஞ்சாத மகாலிங்கம் கொள்ளையர்களுடன் தீவிரமாக போராடியதில் சிறு காயங்களிற்கு உள்ளாகியிருந்தார்.

தீவிர போராட்டத்தின் பின்னர் கொள்ளையர்கள் 4000 பவுண்டுகள் மதிப்புள்ள புகையிலை மற்றும் 350 பவுண்டுகள் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதௌ அடுத்து 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த கொள்ளைச்சம்பவம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, கொள்லையர்களிற்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Paul Blake (வயது 39), Luke Page (வயது37), மற்றும் John Murray (வயது 42) ஆகிய மூவருக்கே இவ்வாறு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகாலிங்கம் தனது தொழிலை மேற்கொள்வதற்கும் தனது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கும் உறுதிமொழி அளித்துள்ளார்.

அத்துடன் பிரித்தானிய மக்கள் மிகவும் அன்பானவர்கள், என்றும் அக்கறை கொண்டவர்கள் எனவும் தன் மீது அவர்கள் அதிகம் கரிசனை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த பகுதியில் தாம் 10 வருடங்களுக்கு மேல் கடை ஒன்றை நடத்தி வருகின்றதாகவும், இந்நிலையில் கொள்ளை சம்பவத்தின் பின் மக்கள் காட்டிய அன்பு மிகப்பெரியது எனவும் , பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடு பாராட்டிற்குரியது எனவும் மகாலிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.