ஈழத்தின் மைந்தன் கலாநிதி ராதன் சுப்ரமணியம் அவர்கள் நியூசிலாந்து பல்கலைக்கழக பீடாதிபதியாகப் பொறுப்பேற்பு

தமிழீழம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற மருத்துவப் பேராசிரியரான ராதன் சுப்ரமணியம் உலகின் முதல்தர மருத்துவக் கல்லூரியான நியூசிலாந்து ஒட்டாகோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடாதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார்.

அத்துடன் மருத்துவப் பேராசிரியரான ராதன் சுப்ரமணியம் அவர்களின் ஆய்வுகளுக்காக எதிர் காலத்தில் மருத்துவத்திற்கான நோபெல் பரிசு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஈழத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் கலாநிதி ராதன் சுப்ரமணியம் அவர்களிற்கு பலரும் தமது பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை இவரது குடும்பத்தினர் சிலர் இந்திய ஆக்கிரமிப்பு படைகளால் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.