லண்டனின் பிரபல உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணரையும் பலிவாங்கிய கொரோனா!

லண்டனின் பிரபல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியாகி உள்ளதாக பிரிட்டிஷ் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை சங்கம் தெரிவித்துள்ளது.

63 வயதான ஆதில் எல் தயார் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு மார்ச் 25 ஆம் திகதி மேற்கு லண்டனின் இஸ்லேவொர்த்தில் உள்ள வெஸ்ற் மிடில்செக்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் (West Middlesex University Hospital in Isleworth, west London) உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மார்ச் நடுப்பகுதியில் அறிகுறிகள் தென்பட்டதில் இருந்து தன்னை சுயமாக தனிமைப்படுத்திக் கொண்ட வைத்தியர் ஆதில் எல் தயார், சூடான், சவுதி அரேபியா மற்றும் தெற்கு லண்டன் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல மருத்துவமனைகளில் பணியாற்றியவர்.

அவர் நோய்வாய்ப்பட்டதற்கு முந்தைய நாட்களில், தலைநகருக்கு வெளியே இரண்டாவது ஹொட்ஸ்பொட் – மிட்லாண்ட்ஸில் உள்ள ஒரு மருத்துவமனையில் (the Midlands – a second hotspot outside the capital) பணிபுரிந்தபோது அவர் கோவிட் -19 தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் நம்புகிறார்கள்.

அவரது உறவினர் வைத்தியர் ஹிஷாம் எல் கிதிர் இது குறித்து கூறுகையில்,

அவரது மகன் இது குறித்து அதிக கவனம் எடுத்திருந்ததுடன் நோய் தொற்று ஏற்பட வாய்பிருப்பதாக உண்மையிலேயே பயந்திருந்தார். இந்த நோய் பயங்கரமானது, மேலும் பல வாரங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கும் நிலையில் இன்னும் பல குடும்பங்களை கவலையில் ஆழ்த்தப் போகிறது என்றும் ஆதில் எங்கள் குடும்பத்தின் மையமாக இருந்தவர், அவர் பலரால் மதிக்கப்படுபவர் என கவலையுடன் தெரிவித்துள்ளார்.

ஜெட்டாவில் உள்ள கிங் ஃபஹத் பொது மருத்துவமனையில் பணியாற்றுவதற்காக 2007 இல் சவுதி அரேபியாவுக்கு இடம்பெயர்வதற்கு முன்பு வைத்தியர் எல் தயார், றூற்றிங் (St George’s Hospital Tooting) சென் ஜோர்ஜ் மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக தனது வாழ்க்கையைத் ஆரம்பித்தார்.

அதன்பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டில் அவர் தனது சொந்த நாடான சூடானுக்கு திரும்பிச் சென்று உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைப்பிரிவை உருவாக்கி கார்ட்டூமில் உள்ள இப்னு சினா மருத்துவமனையில் பணியாற்றினார்.

பின்னர் அவர் மீண்டும் சென் ஜோர்ஜ் மருத்துவமனைக்கு திரும்பியதாக அறுவை சிகிச்சை நிபுணரும் ஆலோசகருமான அப்பாஸ் கஸன்பார் வைத்தியர் எல் தயாரை “உன்னத மனிதர்” என வர்ணித்துள்ளார்.

அத்துடன் திரு எல் தயார் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்புள்ள அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார், அவர் தனது கடிண உழைப்பால் சேவையால் உலகெங்கிலும் உள்ள பலருக்கு வாழ்க்கையின் விலைமதிப்பற்ற பரிசை வழங்கினார்,” என்றும் அவர் கூறினார்.

இதேவேளை தனது உறவினரின் மரணம் பிரிட்டனின் பெருகிவரும் கொரோனோ தொற்றின் காரணமாக ஏற்படும் அழுத்தங்கள் NHS மருத்துவமனைகளில் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பிற்கான கேள்விகளை எழுப்புவதாகவும் வைத்தியர் எல் கிதிர் சுட்டிக் காட்டியுள்ளார்.