லண்டனில் கொடிய கொரோனா நோயால் இலங்கையர் பரிதாப பலி

பிரித்தானியாவில் - லண்டனில் வசிக்கும் இலங்கை ஒருவர் நேற்று (28) மாலை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் 55 வயதுடையவர் எனவும், லண்டனில் உள்ள ஃபெல்த்தம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியள்ளன.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது வரையில் 645,000 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், உலகம் முழுவதும் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 109 பேர் வரையில் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே, இன்று மாலை குறித்த இலங்கையர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.