லண்டனில் கட்டப்படும் இரண்டாவது பரந்த மரணக் கிடங்குகள்! வெளியானது புகைப்படங்கள்...

கிழக்கு லண்டன் லெய்டனில் (Leyton) கிட்டத்தட்ட 10 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாவது பரந்த மரணக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகிறது.

கிழக்கு லண்டனில் ஆரம்ப பாடசாலை மற்றும் கழிவுநீர் ஆலைக்கு அருகில் குப்பை லாரிகளை சேமிக்க முன்னர் பயன்படுத்தப்பட்ட தளத்தில் இரண்டாவது பரந்த சவக்கிடங்கு கட்டப்பட்டு வருகிறது.

இது எக்செல் என்.எச்.எஸ் புதிய நைட்டிங்கேல் மருத்துவமனையிலிருந்து ஆறு மைல் தொலைவில் உள்ளது

புதிய நைட்டிங்கேல் மருத்துவமனையிலிருந்து இறந்தவர்களை அங்கு கொண்டு செல்லப்படும்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து வயது குழந்தை உட்பட 4,313 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 708 பேர் உயிரிழந்துள்ளதுடன் கடந்த 24 மணி நேரத்தில் 3,735 கொரோனா வைரஸ் நோயாளார்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 42 ஆயிரத்தை எட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.