கொரோனா தொற்று பிரிட்டனில் வயதில் இளைய NHS தாதியர் பரிதாப மரணம்

பிரிட்டனில் கொவிட் – 19 தாக்குதலுக்கு NHSன் மற்றும் ஒரு தாதியர் மரணித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 23 வயதுடைய ஜோன் அலகோஸ் 12 மணி நேர தொடர் பணியாற்றுகைக்கு பின் ‘சரியான பாதுகாப்பு அங்கி இல்லாமல்’ இறந்தார் என பிரிட்டனின் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கவனித்து மரணித்த மூன்றாவது NHS தாதியரான இவர் பிரிட்டனில் கொரோனா தொற்றால் இறந்த இளைய மருத்துவ பணியாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வட்போர்ட் பொது மருத்துவமனையில் 12 மணி நேர பணியின் போது தனது மகன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், ஆனால் பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக வீடு திரும்ப அனுமதிக்கப்படவில்லை என்றும் அவரது தாயார் ஜினா குஸ்டிலோ குறிப்பிட்டுள்ளார்.