பிரித்தானியாவில் கொரோனாவால் நிறுத்தப்பட்ட திருமணம்.... இலங்கை மருத்துவர் எடுத்த முடிவு!

முடிவு செய்த திருமணம் கொரோனாவால் அச்சத்தால் தடைபட்ட நிலையில், இலங்கை மருத்துவர் ஒருவர் தமது காதலியை தான் பணியாற்றும் மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மத்திய லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் பணியாற்றி வருபவர்கள் 34 வயது செவிலியர் ஜான் டிப்பிங் மற்றும் 30 வயது மருத்துவர் அன்னலன் நவரத்னம் ஆகியோர்.

இவர்கள் தங்கள் திருமணத்தை ஆக்ஸ்டு மாதம் நடத்த முடிவு செய்திருந்த நிலையில், வடக்கு அயர்லாந்து மற்றும் இலங்கையிலிருந்து தங்கள் குடும்பத்தினர்கள் பாதுகாப்பாக லண்டன் செல்ல முடியுமா என்ற அச்சம் காரணமாக ரத்து செய்ய முடிவு செய்தனர்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் குடும்பத்தாரின் உடல் நலனே பிரதானம் என்பதால், இருவரும் தாங்கள் பணியாற்றும் மருத்துவமனையில் அமைந்துள்ள தேவாலயத்தில் மணம் முடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி ஏப்ரல் 24 ஆம் திகதி இருவரும் மிகச் சாதாரணமாக திருமணம் செய்து கொண்டதுடன் அதனை தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நேரலை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.