பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பாரிஸின் உயரமான கட்டிடத்தின் மீது ஏறிய நபருக்கு நேர்ந்த கதி!

பயமே இல்லாமல் பாரிஸின் மிக உயரமான கட்டிடத்தின் மீது பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஒருவர் ஏறிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சில சமயங்களில் மனிதர்கள் சிலர் மிகவும் வித்தியாசமான விஷயங்களில் ஈடுபட்டு சிக்கலில் மாட்டிக்கொள்வர்.

அந்தவகையில், தற்போது பாரிஸின் மிகவும் உயரமான கட்டிடத்தின் மீது ஏறியதற்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரிஸில் உள்ள மிக உயரமான கட்டிடம் டூர் மான்ட்பார்னஸ். அந்த கட்டிடத்தின் மொத்த உயரம் 690 அடி.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அப்பகுதியை சேர்ந்த ஒருவர், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், அந்த கட்டிடத்தின் மீது ஏறியுள்ளார்.

மாலை 6 மணி அளவில் கட்டிடத்தின் மீது ஏறத்தொடங்கிய அந்த நபரை இரவு 8 மணிக்கு அப்பகுதி பொலிஸார் கைது செய்தனர்.

இரண்டு மணி நேரத்தில் அந்த நபர் அதிக உயரம் ஏறிவிட்டார். பின்னர் மீட்புக் குழுவினர் வந்து அந்த நபரை தடுத்து உயரத்தில் இருந்து அவரை மீட்டுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

"திடீரென அந்த நபர் உயரமான கட்டிடத்தின் மீது ஏறத்தொடங்கிவிட்டார். எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஸ்பைடர் மேன் போல அந்த நபர் செய்துகொண்டிருந்தார். இறுதியில் கைது செய்யப்பட்டார்" என்று குறிப்பிட்டனர்.

இதேவேளை இதற்கு முன்னர், கடந்த 2015ம் ஆண்டு இதே கட்டிடத்தில் ஒருவர் ஏற முயற்சி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.