அமெரிக்க இந்து கோயிலில் சிறுவன் பலி

அமெரிக்காவில் இந்து கோவில் கட்டுமானப்பணியின் போது சிறுவன் ஒருவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான்.

அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில், ஹேமில்டன் என்ற இடத்தில் சுவாமி நாராயண் மந்திர் என்ற இந்து கோவிலில் கட்டுமானப்பணி ஒன்று நடந்து வருகின்றது.

இந்நிலையில் இதில் தன்னார்வ தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கட்டுமானப்பணியில் உதவினர்.

இந்த நிலையில் அங்கு கட்டுமானப்பணியின்போது 45 அடி உயரத்தில் இருந்து 16 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராத வகையில் தவறி விழுந்துள்ளான்.

உடனடியாக அங்குள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.பலியான சிறுவன் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.