வேட்டி கட்டி தான் விமானம் ஓட்ட வருவேன்! அடம்பிடித்த ஈழத் தமிழன்

வேட்டி கட்டித்தான் விமானம் ஓட்ட வருவேன் என ஈழத் தமிழன் ஒருவர் அமெரிக்காவையே அலறடிக்கவைத்துள்ளார்.

என் பாரம்பரிய உடையை அணிய நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்..? அமெரிக்காவில் வானூர்தி ஓட்ட வேட்டி கட்டி தான் வருவேன் என சண்டைபோட்டு அனுமதி வாங்கி வேட்டி கட்டி விமானம் ஓட்டியுள்ளார் ரவிகரன் ரணேந்திரன்.

ரவிகரன் ரணேந்திரன் அகரன் என்ற ஏவுகணையை உருவாக்கியவர்.

தமிழ் வார்த்தைகளை தவிர்த்து பிறமொழி சொற்களை பயன்படுத்த விரும்பாத அனுமதிக்காத ஒரு தமிழனாக இருக்கின்றார்.

தொடர் செயற்திட்டங்களின் முதல் படிநிலையாக எனது ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் இரவு பகலாக கடினமாக உழைத்து 'அகரன்'ஐ உருவாக்கியுள்ளேன்.

ஏவுகணையின் உந்துசக்தி தொடர்பில் நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நான் தேர்ந்தெடுத்த முறைமையால் இந்த ஏவுகணை மிகவும் வினைத்திறன் கொண்டதென ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்று ரவிகரன் ரணேந்திரன் கூறியுள்ளார்.