ஏதும் முடியாவிட்டால் வாயை மூடுங்கள் - ட்ரம்பை சாடிய போலீஸ் அதிகாரி

அமெரிக்காவில் கருப்பினத்தவரான் ஜார்ஜ் பிளாய்டின் பொலிஸ்காரர் ஒருவரால் கொல்லப்பட்ட நிலையில் அங்கு போராட்டங்கள் கலவரங்கள் இடம்பெற்றுக்கொண்டு இருக்கிறது

இதற்கிடையே கலவரம் தொடர்பாக மாநில ஆளுநர்களை அதிபர் ட்ரம்ப் சாடியுள்ளதுடன் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் கலவரத்தை கட்டுப்படுத்த தவறினால் ராணுவத்தைக் கூட களம் இறக்கிவிடுவேன். இது ஆதிக்கம் செலுத்த வேண்டிய நேரம் எனவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில் ட்ரம்பின் இந்த பேச்சுக்கு உயர் காவல் அதிகாரி ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிஎன்என் தொலைக்காட்சிக்கு பேசிய காவல் அதிகாரி ஹோஸ்டன்,

அதிபரால் ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்ய முடியவில்லை என்றால், வாயை மூடிக்கொண்டு இருங்கள். 20 வயதுக்குட்பட்ட ஆண்களையும், பெண்களையும், இளம் வயதினரையும் நாம் சிக்கலில் சிக்க வைத்துள்ளோம். இது ஆதிக்கம் செலுத்தும் நேரம் அல்ல. மக்களின் மனங்களை வென்றெடுக்கும் நேரம். பலர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நேரத்தில் பலத்தைக் காட்டுவது நல்ல தலைமைக்கு அழக்கல்ல என்றும் நமக்கு இப்போது தேவை நல்ல தலைமை. இது ஹாலிவுட் அல்ல இது நிஜ வாழ்க்கை. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க மக்கள் அமைதிகாக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்ட அவர் வெறுப்பை அடக்கும் வழி அன்புதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.