வெள்ளை மாளிகை விருதை வென்றார் கனடிய மாணவி ரம்மியா கணேஸ்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் 2020 ஆம் ஆண்டிற்கான தன்னூக்க சாதனை மாணவர் புலமைப்பரிசில் விருதை மிசிசிப்பி வலி மாநில பல்கலைகழகத்தின் முன்னனி விளையாட்டு வீராங்கனைகள் இருவர் பெற்றுள்ளனர்.

கடனாவின் ஸ்காபுரோவைச் சேர்ந்த ரம்மியா கணேக்ஷ் மற்றும் லண்டனை சேர்ந்த சைனா சோயர்ஸ் ஆகியோரே இந்த விருதைப்பெற்றுள்ளனர்.

அதியுயர் கல்விச் சாதனை, பல்கலைகழக மற்றும் சமூக ஈடுபாடு மற்றும் தொழில் முனைப்பு ஊக்கம் ஆகியவைகளே இந்த மாணவிகளின் புலமைப்பரிசு விருதுக்கு காரணமென பல்கலைக்கழக தகவல் வெளியீடு தெரிவிக்கின்றது.

கோவிட் - 19 நெருக்கடி காலத்தில் இவர்கள் கல்வி மற்றும் விளையாட்டில் சாதனை புரிந்துள்ளமை அமெரிக்காவிற்கு பெருமை சேர்ப்பதாக அமெரிக்க கல்விச்செயலாளர் பெற்சி டெவொஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்காபுரோ ஜோன்போல் கல்லூரியில் கல்வி பயின்று மேற்படிப்பிற்காக மிசிசிப்பி பல்கலைகழகத்திற்கு புலமைப்பரிசில் பெற்று அங்கு சென்று கல்வி கற்றுவரும் ரம்மியா, சிறந்த வீரரும் , தடகள விளையாட்டு வீரரும் ஆவார்.

அதோடு கனடாவில் உதைபந்தாட்ட போட்டிகளில் கனிஸ்ர மத்தியஸ்தராகவும் விளங்கிய இவர் டுர்ஹம் விளையாட்டுக்கழகத்தின் வீரராகவும் திகழ்ந்தவர்.

மேலும் கனடிய மண்ணில் புகழ்பெற்ற உதைபந்தாட்ட மத்தியஸ்தராக விளங்கும் எஸ்.கணேக்ஷ் - தயாமதி தம்பதியினரின் இரண்டாவது புதல்விதான் ரம்யா என்பது இங்கு குரிப்பிடத்தக்கது.