திடீரென நுவரெலியாவாக மாறிய யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் இன்று நண்பகல் சுமார் 45 நிமிடங்கள் பெய்த கடும் மழையால் வெள்ளம் நிரம்பியதைக் காண முடிந்தது.

இடி, மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்ததால் வயல்கள் வெள்ளத்தில் நிரம்பியுள்ளன. தாழ்வான பகுதிகள் சில வெள்ளத்தில் மூழ்கின.

எதிர்பாரத மழை பெய்ததால் விவசாயிகள் சிலருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.