மீனவர்களிற்கு முக்கிய அறிவிப்பு!

நாட்டின் காலநிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அந்தவகையில் பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை, கொழும்பு, புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதோடு, அவ் வேளைகளில் கடல் மிகவும்கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள்து.

இந்த நிலையில் குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்துவீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக் கடற் பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.