மட்டக்களப்பில் கடும் காற்றுடன் கூடிய மழை!

நாட்டில் மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களில் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் திடீரென அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும்,வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் , மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் மேலும் கூறியுள்ளது.

இதேவேளை நீண்ட நாட்களாக மழயின்றி இருந்த கிழக்கு மாகாணமான மட்டக்களப்பில் தற்பொழுது கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.