இடியுடன் கூடிய மழை அதிகரிக்கும்-வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மக்களை மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு, ஊவா, வடமத்திய, வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் இன்று 75 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.