மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள 858 பெண்கள்!

வௌிநாடுகளில் உள்ள தூதரங்களின் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 858 பெண்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதில் அதிகமானோர் குவைத் தூதுவராலயத்தின் பாதுகாப்பு வீடுகளில் தங்க வைக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குவைத்தில் இருந்து 588 பேரும், சவுதியில் இருந்து 18 பேரும், ஜோர்தானில் இருந்து 12 பேரும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 95,908 பேர் தொழிலுக்காக வௌிநாடு சென்றுள்ள நிலையில் , அவர்களில் 56,526 பேர் ஆண் தொழிலாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டின் ஜூன் மாதம் வரையான காலத்தில் 39,382 பெண் தொழிலாளர்கள் வௌிநாடு சென்றுள்ளனர்.

இதேவேளை சவுதி நாட்டுக்கு மட்டும் தொழிலுக்காக சென்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,747 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.