இத்தனை நாடுகளில் இவ்வளவு அணு ஆயுதங்களா? அதிர்ச்சித் தகவல்..!

அணு ஆயுத விடயம் என்பது இந்த உலகத்தின் அச்சுறுத்தல் நிறைந்த எம கண்டம் என்றுதான் சொல்லலாம். உலகிலேயே யார் பலசாலி என்பதைப் புடம்போட்டுக்காட்டுவதற்காக சில நாடுகள் அணு ஆயுத உற்பத்தியில் ஆர்வம் காட்டுகின்றன.

அணு ஆயுதங்களை வைத்தே மற்ற நாடுகளை மிரட்டிவருகின்ற நாடுகளும் உள்ளன, அதேபோல இருக்கிற இடமே தெரியாமல் அணு ஆயுதத்தை வைத்திருக்கின்ற நாடுகளும் உள்ளன.

ஆனால் யாரிடம் அணு ஆயுதம் இருந்தாலும் அது இந்த உலகுக்கு நேர்கின்ற மிகப்பெரிய அழிவுக்கருவி என்றே சொல்லவேண்டும். சரி, எந்தெந்தெ நாடுகளில் எத்தனை அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்பது தெரியுமா?

உலகில் ஒன்பது நாடுகளில் 15ஆயிரம் அணு ஆயுதங்கள் இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் அதிர்ச்சிமிக்க செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த நாடுகள் எவையெனப் பார்த்தால், உலகில் அணுஆயுத வல்லமை படைத்த ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா, சீனா, வடகொரியா ஆகிய 9 நாடுகள்தான்.

இந்த நாடுகளில் 15ஆயிரம் அணு ஆயுதங்கள் உள்ளதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி ரஷ்யா மிக அதிக அளவாக ஏழாயிரம் அணு ஆயுதங்களையும் அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா ஆறாயிரத்து எண்ணூறு அணு ஆயுதங்களையும் பிரான்ஸ் முந்நூறு அணு ஆயுதங்களையும், சீனா 270அணு ஆயுதங்களையும் வைத்துள்ளன.

அதேபோல பிரிட்டனில் 215 அணு ஆயுதங்களும் பாகிஸ்தானிடம் 140அணு ஆயுதங்களும், இந்தியாவில் 130அணு ஆயுதங்களும் உள்ளன. இதைவிட இஸ்ரேலில் 80 அணு ஆயுதங்கள் உள்ளன.

இதேவேளை தற்பொழுது உலகத்தையே மிரட்டிவருகின்ற வடகொரியாவில் 60 அணு ஆயுதங்கள் உள்ளதாகவும், இது சுவீடனில் உள்ள உலக அமைதிக்கான ஆராய்ச்சி மையத்தின் கணிப்பைவிட 3மடங்கு அதிகமாக உள்ளதாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.