ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்து

வங்காள தேசத்தில் உள்ள தாகுர்பராவில் ஏற்பட்ட வன்முறையின் போது 30 இந்துக்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

வங்காள தேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டி ஆக உள்ளனர். அங்கு அவர்கள் மீதான தாக்குதல் சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று ரங்பூர் மாவட்டம் தாகுர் புரா கிராமத்துல் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதாக கூறி ஒரு கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. ரங்பூர் மாவட்டத்தில் உள்ள 7 கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பலாக திரண்டு தாகுர்பரா கிராமத்தில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் இந்துக்களின் வீடுகளுக்கு தீவைத்தனர்.

இதில் 30க்கும் வீடுகள் எரிந்து சாம்பலாயின. பெரும்பாலான வீடுகள் சேதம் அடைந்தன.

இதானல் அங்கு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வன்முறை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட கும்பலை கலைக்க போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

அதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 குழு அமைக்கப்பட்டது.

மேலும், இந்த குழு ஒருவாரத்தில் அறிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.