கடவுளுக்காக கண்களை தியாகம் செய்த விசித்திரப் பெண்

அமெரிக்கா – தென் கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடவுளுக்காக தனது கண்களைக் குருடாக்கி தியாகம் செய்துள்ளார்.

தென் கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த 20 வயதான கயாலி என்பவரே இந்தத் தியாகத்தைச் செய்துள்ளார்.

மத நம்பிக்கை கொண்ட அவர் கடந்த மாதம் ஒரு தேவாலயத்தின் வெளியே தனது கண்களை சேதப்படுத்துவதை அந்த வழியாகச் சென்ற பலர் கண்டுள்ளனர்.

அதில் சிலர் இவரது நடவடிக்கையை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர். ஆனாலும் அவர் தனது கண்களை குருடாக்கினார்.

மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

”கல்லறைகளில் கட்டுண்டு கிடக்கும் ஆத்மாக்களுக்காக அவர்களை விடுவிக்க எனது கண்களை கடவுளுக்கு தியாகம் செய்துள்ளேன்.

கல்லறைகளில் ஆத்மாக்கள் கட்டுண்டு கிடப்பதால் தான் உலகம் இருண்டு காணப்படுகிறது. அதனாலையே அழிவுகள் பெருகியுள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் தனத வாழ்க்கை தற்போது மிகவும் அழகாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.