கூண்டுக்குள் அடைத்து இந்தியர்களை கொடுமை படுத்திய அரேபி கொடூரன்: காணொளி பார்க்க!

இந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய அரேபிய நபர் ஒருவரின் காணொளி வெளியானதால் தற்போது, சர்ச்சை எழுந்துள்ளது.

அபுதாபியில் நடந்து வரும் ஆசிய கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு சில நிமிடத்திற்கு முன்பாக பரபரப்பான காணொளி ஒன்று வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

குறித்த காணொளியில் , சில இந்தியர்கள் பறவைக் கூண்டில் அடைபட்டுக் கிடக்கின்றனர். அப்போது, வெளியே அமர்ந்திருக்கும் அரபு மனிதர் ஒருவர் கையில் கம்பு வைத்துக் கொண்டு, அடைபட்டுக் கிடப்பவர்களிடம் யாருக்கு நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்று கேட்கிறார்.

உள்ளே இருப்பவர்கள், இந்தியாவுக்குத்தான் ஆதரவு என்று கூற அவர்களை பிரம்பால் அடித்து அமீரகத்துக்கு ஆதரவு தருவதாக கூறுமாறு வற்புறுத்தினர்.

பின்னர், நாங்கள் அமீரகத்துக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று சொன்ன பிறகே வெளியே விடப்படுவது போன்று அந்த காணொளியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, குறித்த நபரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.