இன்று நிகழ்ந்த உலகை உலுக்கிய சம்பவம்! பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில்...

நியூசிலாந்து Christchurch நகரில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாசல்கள் மீது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் இது வரை எவ்வித தகவலையும் அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவு மற்றும் பிரதமரின் உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியிடவில்லை.

எவ்வாறாயினும் 40 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் உயிரிழந்திருப்பதாகவும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட இரு பள்ளிவாசல்களின் ஒன்றில் பங்களாதேஸ் கிரிக்கட் அணி வீரர்கள் இருந்துள்ளதுடன் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.