ஆபிரிக்க நாட்டொன்றில் பிரான்ஸை சேர்ந்த தமிழர் ஒருவர் கைது!

சர்வதேச பொலிசாரினால் தேடப்பட்டு வந்த தமிழர்களில் ஒருவர் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான செனகலில் கைது செய்யப்பட்டுள்ளதாக செனகல் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்சை வசிப்பிடமாக கொண்ட குறித்த தமிழர் பயணமுகவராக இயங்கி வந்திருந்ததோடு, ஆபிரிக்காவில் இருந்து பெருந்திரளனவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவ்வூடகம் தெரிவித்துள்ளது.

பிரென்ஸ் பொலிஸாரின் கண்காணிப்பு வலையத்துக்குள் வந்த அவரது நகர்வுகளை கடந்த 2015ம் ஆண்டுமுதலே பொலிசார் கண்காணித்து வந்திருந்தனர்.

இந் நிலையில், போலி ஆவணங்கள் ஊடாக செனகர் டக்காவில் இருந்து போர்த்துக்கல் சென்று, அங்கிருந்து பிரான்ஸ்ஸிற்குள் உள்நுழைய இருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை செனகலில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கைது செய்யப்பட்ட நபர் விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர் குறித்த ஊடகம் தெரிவித்துள்ள போதும், இவ்விடயத்தில் இது தொடர்பான உண்மைத்தன்மையினை உறுதிசெய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.