பிரித்தானியா முழுவதும் உறைபனிக் குளிர்

பிரித்தானியா முழுவதும் உறைபனிக் குளிர் வானிலை ஏற்பட்டுள்ளது. வெப்பநிலை -6C க்கு வீழ்ச்சியடைவதால் வானிலை அலுவலகம் பனிப்பொழிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வீதியின் மேற்பரப்புகளில் பனி படர்ந்திருப்பதனால் வாகனச் சாரதிகள் அவதானமாக வாகனங்களைச் செலுத்தவேண்டும் என வானிலை அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் குளிரானது எலும்பையும் குளிர்விக்கும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜாவிக்கைவிட கடுமையான குளிர் இங்கிலாந்தை வாட்டுகின்றது.

பிரித்தானியாவின் பல பகுதிகள் இன்று மூடுபனியால் மூடப்பட்டிருந்தன. மேலும் மூடுபனியினால் காலையில் பயண இடையூறுகள் ஏற்பட்டன.

தென் இங்கிலாந்து முழுவதும் சில பகுதிகளில் அடர்த்தியான மூடுபனி காணப்படுவதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் வெப்பநிலை இரவு -4C ஆகக் குறைந்திருந்தது.