வெளிநாடொன்றில் நெஞ்சை உருக்கும் காட்சி... மருத்துவமனை தரையில் வரிசையாக படுத்து கிடக்கும் கொரோனா நோயாளிகள்!

ஸ்பெயின் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் வரிசையாக தரையில் படுத்திருக்கும் காட்சி வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று சுமார் 192 நாடுகளுக்கு பரவியுள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று.

ஸ்பெயினில் இதுவரை கொரோனாவிற்கு 1,772 பேர் பலியாகியுள்ளனர், 28,768 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயின் மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால், கொரோனா நோயாளிகள் பலர் தரையில் வரிசையாக படுத்திருக்கும் ஆவலம் ஏற்பட்டுள்ளது.

உலகத் தலைவர்கள் விரைவாக செயல்படவில்லை என்றால், அவர்களது நாடுகளும் விரைவில் இதே நிலைமையை எதிர்க்கொள்ளக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

loading...