இந்த அறிகுறி கூட கொரோனாவாக இருக்கலாம்! பிரான்ஸ் விஞ்ஞானிகள் தகவல்

வாசனை இழப்புகூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என பிரான்ஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள நிலையில் பிரிட்டிஷ் மருத்துவர்கள் சிலரும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸின் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், இருமல் மற்றும் சளி, உடல் சோர்வு, ஒருசிலருக்கு மூச்சுத்திணறல் ஆகியவை உள்ளது.

இந்தநிலையில் வாசனையை அறியும் தன்மையை இழப்பதும் கரோனா நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரான்ஸ் சுகாதார சேவைத் தலைவர் ஜெரோம் சாலமன் கூறுகையில், ''மூக்கடைப்பு அல்லது மூக்கில் நீர் ஒழுகுவது ஆகிய அறிகுறிகள் இல்லாமல், திடீரென வாசனையை நுகரும் தன்மையை இழந்தால் அது கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் இது குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அதிகமாக ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.

நிகழ்காலத்தில் செய்த சோதனைகளின் அடிப்படையில், இதைக் கூறுகிறோம் எனக்குரிப்பிட்ட அவர் இதையும் கொரோனா தொற்றுக்கான பொதுவான அறிகுறியாகக் கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அப்படிப்பட்ட மக்களைச் சுய தனிமைப்படுத்த வேண்டும் என்றும் தற்போது கொரோனாவின் வழக்கமான அறிகுறிகள் இல்லாதவர்கள் இந்த அறிகுறியுடன் இருப்பது அதிகரித்து வருகிறதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ருசியின் தன்மையை இழப்பது கூட, கொரோனாவின் அரிய வகை அறிகுறியே'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மற்ற மருத்துவர்கள் இதுதொடர்பான ஆய்வு இன்னும் முழுமை அடையவில்லை என தெரிவித்துள்ளனர்.