நாடு திரும்பமுடியாமல் தவிக்கும் 100 இலங்கை மாணவர்கள்!

நேபாளத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அங்கு பல்கலைக்கழகங்கள் அதிரடியாக மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அங்கு கல்விகற்ற இலங்கை மாணவர்கள் 100 பேர் நாடு திரும்பமுடியாமல் தவிக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக பொக்காரா நகரிலுள்ள மருத்துவப் பல்கலைக்கழகம் உட்பட சகல பல்கலைக்கழங்களையும் நேபாள அரசு மூடியது.

இதன் காரணமாக் அங்கு கற்கின்ற மாணவர்கள் வீடு திரும்புகின்ற நிலையில், இலங்கை மாணவர்கள் பாரிய நெருக்கடியை சந்தித்திருக்கின்றனர்.

இதேவேளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டிருப்பது இன்னும் பாரிய சிக்கலை மாணவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

loading...