கொரோனா என்ற சொல்லை யாரும் சொல்லக்கூடாது ! பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்த நாடு?

கொரோனா என்ற சொல் உலகையே ஆக்கிரமித்துள்ள நிலையில், ஒரு நாட்டில், கொரோனா வைரஸ் என்ற பெயரையே யாரும் பகிரங்கமாக உச்சரிக்காத நாடொன்றும் உள்ளது.

அந்த நாடுதான் துர்மெனிக்ஸ்தான்.

அந்த நாட்டு ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய, கொரோனா வைரஸ் என்ற சொல் தேசிய சொற்களஞ்சியத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தன்னார்வ அமைப்புக்கள் அறிக்கையிட்டுள்ளன.

துர்க்மெனிஸ்தானின் ஜனாதிபதி குர்பங்குலி பெர்டிமுக்மடோவ் தலைமையிலான அரசாங்கம், பெப்ரவரி தொடக்கத்திலிருந்து கொரோனாக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்தது.

துர்மெனிக்ஸ்தானில் இன்றுவரை, COVID-19 இனால் பாதிக்கப்பட்ட யாரும் கண்டுபிடிக்கப்படவில்லையென அந்த அரசாங்கம் கூறி வருகிறது.

பத்திரிகைச் சுதந்திரத்தில் கிட்டத்தட்ட வடகொரியாவின் நிலைமையில் மிக மோசமான நிலையில் துர்மெனிக்ஸ்தான் உள்ளது.

துர்க்மெனிக்ஸ்தான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள், “கொரோனா வைரஸை” என்ற சொல்லை பொது தகவல்களிலிருந்தும், சுகாதார துண்டுப்பிரசுரங்களிலிருந்தும் நீக்கியுள்ளன.

அதேபோல, அங்குள்ள பாடசாலைகள் வைத்தியசாலைகளின் குறிப்புக்களிலும் கொரோனா என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாடு பிரஜைகளும் கொரோனா என்ற பெயரை பாவிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த வார்த்தையை அகற்றிய போதிலும், அண்டை நாடான உஸ்பெகிஸ்தானின் தலைவர் கடந்த வாரம் துர்க்மெனிக்ஸ்தான் ஜனாதிபதியிடம் பேசியிருந்தார்.

அதன் பின்னர், உஸ்பெக்கிஸ்தான் வெளியிட்ட அறிக்கையில்,

இருதரப்பு ஒத்துழைப்பின் தற்போதைய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன, இதில் கொரோனா பரவாமல் தடுக்க இரு நாடுகளிலும் எடுக்கப்பட்ட முன்னுரிமை நடவடிக்கைகளும் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, துர்க்மெனிஸ்தான் அரசாங்கத்தின் செய்திக்குறிப்பில், கொரோனா பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில் கொரோனா பற்றிய அனைத்து தகவல்களையும் இல்லாமல் செய்வதன் மூலம், நாட்டை காப்பாற்றலாமென ஜனாதிபதி நினைக்கிறார் என சமூக ஊடகங்களில் துர்க்மெனிக்ஸ்தான் ஜனாதிபதி கிண்டல் செய்யப்படுகிறார்.

இந்த தகவல் மறுப்பு துர்க்மெனிக்ஸ்தான் குடிமக்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல், ஜனாதிபதி குர்பங்குலி பெர்டிமுக்மடோவ் விதித்த சர்வாதிகாரத்தையும் வலுப்படுத்துகிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் அவரது திட்டமிட்ட மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச சமூகம் எதிர்வினையாற்ற கேட்டுக்கொள்கிறோம் என கிழக்கு ஐரோப்பாவை தளமாக கொண்ட மனித உரிமை அமைப்பொன்று கூறியுள்ளது.