கிரேனில் ஏற்றி, அந்தரத்தில் தொங்கவிடப்பட்ட மாடு.. கீழே விழுந்து துடிதுடித்து பலி.!

இஸ்லாமியர்களின் ஐந்து புனிதக்கடமைகளில் ஒன்று மெக்கா நகருக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது. இந்தக் கடமையின் ஓர் அங்கமாக ஹஜ் மாதம் 10-ஆம் நாள் சிறப்புத் தொழுகை நடத்தி, அதன் முடிவில் இறைவனுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதை இஸ்லாமிய மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வு பக்ரித் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது.

அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் ஆகும். ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளை பலி கொடுப்பது, பாரம்பரிய முறைப்படி பலி கொடுத்தால் பிரச்சனை இல்லை.

இந்நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகையையொட்டி மாட்டினை கிரேன் மூலமாக உயரத்தூக்கி, பின்னர் கயிற்றை அவிழ்த்து விட்டுள்ளனர்.

அந்தரத்தில் உயிருடன் இருந்த மாடு, கீழே விழுந்து துடிதுடித்து கொடூரமாக இறந்துள்ளது. இந்த வீடியோ பாக்கிஸ்தான் நாட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவலும், இது தொடர்பிலான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.