40 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி தாய்வானுக்கு விஜயம்: கடும் அதிருப்தியில் சீனா!

அமெரிக்காவின் சுகாதார செயலாளர் அலெக்ஸ் அசார் (Alex Azar) தாய்வானுக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தாய்வானுக்கு மூன்று நாட்கள் விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ள நிலையில், கொவிட்-19 வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் அவரது விஜயம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி ஒருவரின் விஜயம் குறித்து சீனா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்த விஜயம் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துகிறது என சீனா, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, இவ்வாறு தாய்வானுக்கு அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் விஜயம் மேற்கொண்டுள்ளமை 40 ஆண்டுகளுக்குப் பின்னரான நிகழ்வு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.